பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-12-22 23:45 GMT
மும்பை,

பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போரிவிலி-பயந்தர்

மும்பை மேற்கு, மத்திய மற்றும் துறைமுக வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேற்கு ரெயில்வே வழித்தடமான போரிவிலி-பயந்தர் இடையே காலை 11.00 மணியில் இருந்து பிற்பகல் 3.00 மணி வரை விரைவு வழித்தடத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

இதனால் விரார் மற்றும் வசாயில் இருந்து போரிவிலி வரும் விரைவு ரெயில்களும், போரிவிலியிலில் இருந்து வசாய் மற்றும் விரார் செல்லும் ரெயில்களும் ஸ்லோ வழித்தடத்தில் திருப்பிவிடப்படும்.

மத்திய ரெயில்வே

மத்திய ரெயில்வே வழித்தடத்தில் முல்லுண்டு-மாட்டுங்கா இடையே காலை 11.10 மணி முதல் பிற்பகல் 3.40 மணி வரை ஸ்லோ வழித்தடத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

இதனால் காலை 10.37 மணி முதல் பிற்பகல் 3.31 மணி வரை தானேயில் இருந்து வரும் ரெயில்கள் அனைத்தும் விரைவு வழித்தடத்தில் திருப்பிவிடப்படும். இந்த ரெயில்கள் முல்லுண்டு, பாண்டுப், விக்ரோலி, காட்கோபர் மற்றும் குர்லா ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ரெயில் சேவை ரத்து

துறைமுக வழித்தடத்தில் காலை 11.10 மணி முதல் பிற்பகல் 3.40 மணி வரை குர்லா- வாஷி இடையே பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் பன்வெல், போலாப்பூர் மற்றும் வாஷியில் இருந்து சி.எஸ்.எம்.டி. க்கும் மற்றும் சி.எஸ்.எம்.டி. யில் இருந்து பன்வெல், போலாப்பூர் மற்றும் வாஷிக்கும் இடையே ரெயில் சேவை இருக்காது.

எனினும் சி.எஸ்.எம்.டி.-குர்லா, வாஷி- பன்வெல் இடையே துறைமுக வழித்தடத்தில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

இந்த தகவலை மத்திய, மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்