வீரவநல்லூர் பூமிநாத சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம்
வீரவநல்லூர் பூமிநாத சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம் நடந்தது.
சேரன்மாதேவி,
வீரவநல்லூர் பூமிநாத சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம் நடந்தது.
திருவாதிரை திருவிழா
நெல்லை மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த சிவாலயங்களில் வீரவநல்லூர் பூமிநாத சுவாமி கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் திருவாதிரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவாதிரை திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது.
முன்னதாக பூமிநாத சுவாமி, மரகதாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளினார். பின்னர் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. தேர் நான்கு ரத வீதிகளிலும் சென்று நிலையத்தை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பக்தர்கள் குற்றச்சாட்டு
சுவாமி பெரிய தேரும், அம்பாள் சிறிய தேரும் பராமரிப்பின்றி உள்ளது. அதனை சரிசெய்ய கோவில் நிர்வாகத்தினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், தேரோட்டத்தில் தேரை பயன்படுத்தாமல் சாதாரண விழாக்களில் பயன்படுத்தக்கூடிய சப்பரத்தையே பயன்படுத்தியதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.