கேளம்பாக்கம் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; முதியவர் படுகாயம் போக்குவரத்து கடும் பாதிப்பு

கேளம்பாக்கம்-வண்டலூர் சாலையில் கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2018-12-21 21:53 GMT
திருப்போரூர்,

சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 60). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை கேளம்பாக்கம்-வண்டலூர் சாலை புதுப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதில் கணேசன் படுகாயம் அடைந்தார். காரை பின்தொடர்ந்து வந்த பஸ் விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் நொறுங்கியது. படுகாயம் அடைந்த கணேசனை பொதுமக்கள் மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

விபத்து காரணமாக கேளம்பாக்கம்-வண்டலூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்