தமிழ், ஆங்கிலத்தில் எழுத தெரியும் வகையில் மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் அரசு தேர்வுத்துறை இணை இயக்குனர் பேச்சு
தமிழ், ஆங்கிலத்தில் எழுத, படிக்க தெரியும் வகையில் அரசு பள்ளி மாணவர்களை, ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி கூறினார்.
புதுக்கோட்டை,
வட்டார கல்வி அலுவலர்களுக்கான மீளாய்வு கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அரசு தேர்வுத்துறை இணை இயக்குனரும், மண்டல ஆய்வு அதிகாரியுமான அமுதவல்லி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-
பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தினமும் காலை, மதியம் இருவேளைகளிலும் மாணவர்களின் வருகை பதிவினை இணையதளத்தில் பதிவு செய்ய வட்டார கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளி திறக்கும் முதல் நாளன்றே 3-ம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள் உள்ளிட்ட மாணவர்களுக்கான நலத்திட்டங்களை வழங்க வேண்டும்.
கல்வித்துறையின் சார்பில் கேட்கப்படும் புள்ளி விவரங்களை வட்டார கல்வி அலுவலர்கள் உடனுக்குடன் வழங்க வேண்டும். மேலும் மாணவர்களின் நலன் கருதி மதிய உணவு சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறுந்தகவலில் அனுப்ப தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் உள்ள மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் எழுத, வாசிக்க தெரிந்திருக்க வேண்டும். கணிதத்தில் அடிப்படை செயல்பாடுகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நிலையை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா, மாவட்ட கல்வி அதிகாரிகள் குணசேகரன், அண்ணாமலை ரஞ்சன், திராவிடச் செல்வம், பள்ளித் துணை ஆய்வாளர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து புதுக்கோட்டையில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தையும், புதுக்கோட்டை வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யும் அலுவலகத்தினையும் அரசு தேர்வுத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக திருக்கோகர்ணம் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பபள்ளியை பார்வையிட்டு, ஆசிரியர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.