கழிவறை பயன்பாடு குறித்து டெல்லி குழுவினர் ஆய்வு

கழிவறைகளின் பயன்பாடு குறித்து டெல்லி குழுவினர் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தனர்.

Update: 2018-12-20 22:30 GMT
தோகைமலை,

தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலை ஊராட்சியில் அரசு நிதி மற்றும், தனிநபர் நிதியில் இருந்து 953 கழிவறைகள் கட்டப்பட்டன. அந்த கழிவறைகளின் பயன்பாடு குறித்து டெல்லி குழுவினர் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தனர். ஆர்.டி.மலை, அழகாபுரி, சங்ககவுண்டன்பட்டி, கீழப்பட்டி, புங்கவாரிபட்டி, தெற்குமேடு, நாகமநாயக்கன்பட்டி, கீழபுதுப்பட்டி, மேலப்புதுப்பட்டி, தேசிப்பட்டி, காயக்காரன்மேடு, கீழவாளியம்பட்டி, மேலவாளியம்பட்டி, வாளியம்பட்டி, ஆதிதிராவிடர் தெரு போன்ற பல்வேறு கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது டெல்லி அதிகாரி முகமதுநிஷார் கழிவறையின் பயன்பாடு, சுகாதாரம் குறித்து பொதுமக்களிடம் விளக்கி கூறினார். இதேபோல, அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், மகளிர் சுகாதார வளாகம், கிராம நிர்வாக அலுவலகம் உள்பட அரசு அலுவலகங்களிலும் கழிவறைகளின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது தோகைமலை ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன், கிராமவளர்ச்சி அலுவலர் ராணி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உஷா, ஊராட்சி செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மாலதி ஆகியோர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்