சென்டிரல் ரெயில் நிலையத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது 7 செல்போன் பறிமுதல்

சென்னை சென்டிரலில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-12-20 22:15 GMT
சென்னை,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகளின் செல்போன்கள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து டி.எஸ்.பி. ரவி உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் முத்துகுமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வாலிபர் ஒருவர் செல்போன்களை திருடும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த வாலிபர் சென்டிரல் ரெயில் நிலைய வளாகத்தில் சுற்றித்திரிவதை பார்த்த போலீசார் உடனே அவரிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.

அதில், அந்த வாலிபர் அந்தமானை சேர்ந்த பாபுராஜ்(வயது 28) என்பதும், அவர் சென்டிரலில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாபுராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 விலையுயர்ந்த செல்போன் களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்