அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் உண்ணாவிரதம்
அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் திடீர்குப்பம் கிராம பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை கிராம மக்கள் அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், திடீர்குப்பம் பகுதியில் உள்ள மண் சாலைகளை தார்ச்சாலைகளாக மாற்றித்தர வேண்டும். மேலும் வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும். திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரியால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கிறது. எனவே மணல் குவாரியை மூடவேண்டும் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வலியுறுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் முத்துலட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.