கரூர் உள்பட 4 இடங்களில் அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கரூரில் நேற்று மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2018-12-19 22:30 GMT
கரூர்,

கரூரில் நேற்று மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளரும், கட்சியின் அவைத்தலைவருமான அன்பழகன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் திருச்சி ஆர்.மனோகரன், முன்னாள் எம்.பி. சிவசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பேசுகையில், “செந்தில்பாலாஜியை போல எத்தனை பேர் கட்சியை விட்டு பிரிந்து சென்றாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஒன்றும் செய்ய முடியாது. பிரிந்து சென்றவர்கள் பின்னால் வருத்தப்படும் நிலை ஏற்படும்” என்றார். இதில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சந்திரசேகர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆரியூர் சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர்கள் தியாகராஜன், பெரியண்ணன், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் சாய் தங்கவேல். க.பரமத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் மூர்த்தி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. 

மேலும் செய்திகள்