செங்கம் அருகே லாரி மோதி 2 கல்லூரி மாணவர்கள் பலி
செங்கம் அருகே லாரி மோதி 2 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
செங்கம்,
திருப்பூரை சேர்ந்தவர் ராஜ்குமார். அவரது மகன் ராம்விக்னேஷ்வரன் (வயது 22). சபாபதி என்பவரது மகன் நவீன் (23). இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ராம்விக்னேஷ்வரன், நவீன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த அரசங்கன்னி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராம்விக்னேஷ்வரனும், நவீனும் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையில் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர், லாரியை சம்பவ இடத்திலேயே விட்டுவிட்டு தப்பியோடி விட்டார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து மேல்செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தலைமறைவான லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.