அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு ‘ஸ்மார்ட்’ போன் கலெக்டர் வழங்கினார்

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு ‘ஸ்மார்ட்’ போன் வழங்கும் நிகழ்ச்சி அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

Update: 2018-12-18 22:30 GMT
அரியலூர்,

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு ‘ஸ்மார்ட்’ போன் வழங்கும் நிகழ்ச்சி அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி 774 அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு ‘ஸ்மார்ட்‘ போனை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், அங்கன்வாடி மையங்கள் மூலம் பயனாளிகளுக்கு அளிக்கப்படும் சேவையை சிறப்பாக செய்வதற்கும், அங்கன்வாடி பணியார்களிடம் இருந்து துல்லியமாக அறிக்கைகளை பெறவும், திட்ட சேவைகளை உரிய நேரத்தில் உரிய பயனாளிகளுக்கு கிடைக்கச்செய்வதற்கும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு ‘ஸ்மார்ட்‘ போன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ‘ஸ்மார்ட்’ போனில் சி.ஏ.எஸ். என்கிற செயலி உள்ளது. அதன் மூலமாக அங்கன்வாடி பணியாளர்கள் குடும்ப நிர்வாகம், தினசரி உணவளித்தல், வீடுகள் பார்வைத் திட்டமிடல், வளர்ச்சி கண்காணிப்பு, வீட்டிற்கு கொண்டு செல்லப்படும் இணை உணவு, தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய விவரம், அங்கன்வாடி மைய மேலாண்மை, மாதாந்திர முன்னேற்ற அறிக்கை போன்ற அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும் என்றார். இதில் திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம்) (பொறுப்பு) புவனேஸ்வரி, உதவித்திட்ட அலுவலர் அன்பரசி, போஜன்அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன், மாவட்ட திட்ட உதவியாளர் சரவணன் மற்றும் அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்