திருச்சியில் கடும் பனிப் பொழிவு: தரை இறங்க முடியாமல் சென்னைக்கு 2 விமானங்கள் திரும்பின

திருச்சியில் நிலவிய கடும் பனி மூட்டத்தால் விமானம் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியது.

Update: 2018-12-18 21:45 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்றுகாலை 6 மணிக்கு 56 பயணிகளுடன் விமானம் திருச்சிக்கு புறப்பட்டு சென்றது. திருச்சியில் நிலவிய கடும் பனி மூட்டம் காரணமாக அங்கு விமானம் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்துவிட்டது.

அதேபோல் காலை 6.10 மணிக்கு 48 பயணிகளுடன் திருச்சிக்கு புறப்பட்டு சென்ற மற்றொரு விமானமும் தரை இறங்க முடியாமல் சென்னைக்கு திரும்பி வந்தது. இந்த 2 விமானங்களும் திருச்சியில் வானிலை சீரானதும் காலை 11.30 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

மேலும் செய்திகள்