நாயை அடித்ததை தடுக்க முயன்றவர் சாவு அண்ணன் கைது
வில்லேபார்லேயில் நாயை அடித்ததை தடுக்க முயன்றவர் கீழே தள்ளிவிட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் அவரது அண்ணனை கைது செய்தனர்.
மும்பை,
மும்பை வில்லேபார்லேயை சேர்ந்தவர் ஹனுமந்தா கோலேகர் (வயது50). சம்பவத்தன்று இரவு இவரை பார்த்து பக்கத்து வீட்டு நாய் குரைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த அவர் உடனே அந்த நாயை சரமாரியாக அடித்து உள்ளார்.
இதை கவனித்த அவரது தம்பி சிவா(45) ஓடிவந்து நாயை அடிக்க வேண்டாம் என தடுத்தார்.
நாய் மீது கடும் கோபத்தில் இருந்த அவர் குறுக்கே வந்த சிவாவை பிடித்து தள்ளிவிட்டு உள்ளார். இதில், கீழே விழுந்ததில் சிவா தலையில் காயம் அடைந்து மயக்கம் போட்டு விழுந்தார்.
இதை பார்த்ததும் பதறிப்போன ஹனுமந்தா கோலேகர் உடனடியாக தம்பியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த ஜூகு போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹனுமந்தா கோலேகரை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.