அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் அதிருப்தியாளர்கள் யாரும் இல்லை பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்தபின் டி.டி.வி. தினகரன் பேட்டி
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் அதிருப்தியாளர்கள் யாரும் இல்லை என்று நேற்று பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த பின் பேட்டியளித்த டி.டி.வி. தினகரன் கூறினார்.
பெங்களூரு,
சொத்து குரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான டி.டி.வி. தினகரன் அடிக்கடி பெங்களூரு வந்து சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசி வருகிறார்.
இதற்கிடையே, கடந்த ஆண்டு(2017) சென்னை போயஸ் கார்டன் உள்பட பல்வேறு இடங்களில் நடந்த வருமான வரி சோதனை தொடர்பாக கடந்த 13 மற்றும் 14-ந் தேதிகளில் சிறையில் வைத்து சசிகலாவிடம், வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக, டி.டி.வி. தினகரனின் ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி திடீரென்று தி.மு.க. கட்சியில் இணைந்தார்.
இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து வெளியேறுவதாக தகவல்கள் பரவின. இதன் காரணமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில், நேற்று டி.டி.வி. தினகரன் தனது ஆதரவாளர்களுடன் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு வந்தார்.
மதியம் 12.45 மணிக்கு டி.டி.வி. தினகரன், தகுதி நீக்கம் ெசய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களான தங்க தமிழ்செல்வன், சுப்பிரமணியன், தங்கதுரை, மாரியப்பன் கென்னடி, கோதண்டபாணி, முருகன், பழனியப்பன், ஏழுமலை, பார்த்திபன், கதிர்காமு, உமாமகேஸ்வரி ஆகியோருடன் சசிகலாவை பார்க்க சிறைக்குள் சென்றார். இவர்களுடன் விருத்தாச்சலம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கலைச்செல்வனும் வந்தார். இவர்களை தொடர்ந்து இளவரசியின் மகன் விவேக், மகள் ஷகிலா, மருமகன் ராஜராஜன், சசிகலாவின் கணவர் நடராஜனின் சகோதரர் பழனிவேல் ஆகியோரும் மதியம் 1.05 மணிக்கு சிறைக்குள் சென்றனர்.
இந்த சந்திப்பின்போது, டி.டி.வி. தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல்பாடு, ஆதரவாளர்களின் நிலைப்பாடு, தமிழக அரசியல் நடவடிக்கை குறித்து சசிகலாவுடன் பேசியதாக கூறப்படுகிறது. மேலும், வருமான வரித்துறை அதிகாரிகளின் கேள்விகள் குறித்தும் அவர்கள் 2 பேரும் பேசி கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமல்லாமல், ஆதரவாளர்கள் சசிகலாவிடம் நலம் விசாரித்துள்ளனர்.
பின்னர், மதியம் 3.15 மணிக்கு டி.டி.வி. தினகரன் உள்பட அனைவரும் சிறையில் இருந்து வெளியே வந்தனர். சிறை வளாகத்தில், டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 12 எம்.எல்.ஏ.க்களுடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சசிகலாவை சந்தித்து பேசினேன். தற்போது ஆதரவாளர்கள் 12 பேருடன் சசிகலாவை சந்தித்து பேசி இருக்கிறேன். இது வழக்கமான சந்திப்பு தான். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைந்து இருப்பதால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. சிலர் விலகுவதன் மூலம் கட்சி அழிந்துவிடும் என்றால் உலகத்தில் யாரும் கட்சி நடத்த முடியாது. தளபதி ஒருவர் சென்றுவிட்டால் அடுத்த தளபதி தேர்வு செய்யப்படுவது வழக்கம். 4 மாதங்களுக்கு முன்பே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். ஏனென்றால், 4 மாதங்களுக்கு முன்பே சொந்த பிரச்சினையை காரணமாக கூறி செந்தில் பாலாஜி கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்டு என் கட்சியில் உள்ள சில எம்.எல்.ஏ.க்கள் வேறு கட்சிக்கு செல்வதாக கூறும் தகவலில் உண்மையில்லை. ஊடகம், பத்திரிகைகளில் வீண் வதந்திகள் பரப்பப்படுகின்றன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் அதிருப்தியாளர்கள் யாரும் இல்லை. என் வளர்ச்சியை பார்த்து ஆளுங்கட்சி மட்டுமின்றி எதிர்க்கட்சியும் பயப்படுகிறது. எனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் மேல்முறையீடு செய்ய மாட்டோம். மக்கள் மன்றத்தில் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளோம்.
அ.தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவற்றை இணைப்பது தொடர்பாக எந்த அழுத்தமும் வரவில்லை. ஒருவேளை அழுத்தம் கொடுக்கப்பட்டால் அதையும் சந்திக்க தயாராக உள்ளோம். எந்த அழுத்தத்துக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அடிபணியாது. நாங்கள் அவர்களுடன் சென்று இணைய வேண்டும் என்பதில் அர்த்தம் கிடையாது. வேண்டுமானால் வெற்றி பெறும் நிலையில் உள்ள எங்கள் கட்சியில் அவர்கள் வந்து இணைந்து கொள்ளட்டும்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் ஒரு கோடியே 10 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றால் மட்டுமே ஸ்டெர்லைட் உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். ஒருவேளை ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் மற்ற கட்சிகளுடன் சேர்ந்து நாங்கள் களத்தில் இறங்கி மக்களுக்கு ஆதரவாக போராடுவோம்.
கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் என்று ஸ்டாலின் முன்மொழிந்து பேசியுள்ளார். இது காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேகதாது விவகாரத்தில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட்டால் கர்நாடக மந்திரி டி.கே.சிவக்குமார் அமைதியாக இருந்து விடுவாரா?. இவ்வாறு அவர் கூறினார்.