ஸ்ரீபெரும்புதூர் அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்ற 4 பேர் கைது ஒடிசாவை சேர்ந்தவர்கள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-12-17 22:00 GMT
ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீரஞ்சீவி உத்தரவின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜீ மற்றும் போலீசார் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கீவளூர் ஊராட்சியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற வடமாநில வாலிபர்கள் 4 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பப்பு போத்திராம் (வயது 26), நிதீன்தாஸ் (33), கமல்நாத் (36) லட்சுமி நாராயண் பீஸ்வால் (27) என்பதும், இவர்கள் அந்த பகுதியில் உள்ள வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு சட்டவிரோதமாக மதுபானங்களை கடத்திவந்து விற்பதும் தெரிந்தது.

இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். கைதான 4 பேரும் காஞ்சீபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்