நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 370 காலியிடங்கள்
மத்திய சுரங்கத்துறையின் கீழ் செயல்படும் நிலக்கரி நிறுவனங்களில் ஒன்று மகாநதி கோல்பீல்ட்ஸ் லிமிடெட்.
தற்போது இந்த நிறுவனத்தில் ஜூனியர் ஓவர்மேன், மைனிங் சர்தார், டெபுடி சர்வேயர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 370 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணி வாரியாக ஜூனியர் ஓவர்மேன் பணிக்கு 149 இடங்களும், மைனிங் சர்தார் பணிக்கு 201 இடங்களும், டெபுடி சர்வேயர் பணிக்கு 20 இடங்களும் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், மைன் என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பு மற்றும் மைனிங் சர்தார், மைன் சர்வேயர் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு, அதில் விதிவிலக்கு விவரங்கள், கட்டணம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 21-12-2018-ந் தேதி விண்ணப்ப பதிவு தொடங்குகிறது. 10-1-2019-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
இது பற்றிய விரிவான விவரங்களை www.mahanadicoal.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.