மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி சாவு
மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த விஜய் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு இறந்தார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை ஆசாரிமார் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது35). இவர் விருதுநகரில் மெடிக்கல் ஸ்டோர் வைத்திருந்தார். மேலும் இவர் நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தின் விருதுநகர் மாவட்ட தலைவராகவும் இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி இவர் விருதுநகருக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அருப்புக்கோட்டை புளியம்பட்டி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரை சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு செந்தில் குமார் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
செந்தில்குமாருக்கு முத்துசெல்வம் என்ற மனைவியும் 2 வயதில் மகனும் உள்ளனர்.