திருப்பூர் மாவட்டத்தில் துப்புரவு பணிக்கு விரைவில் ‘ரோபோ’ அறிமுகம் - தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் தகவல்
துப்புரவு பணியில் விரைவில் ‘ரோபோ’ அறிமுகப்படுத்தப்படும் என்று தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் கூறினார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் துப்புரவு பணியில் விரைவில் ‘ரோபோ’ அறிமுகப்படுத்தப்படும் என்று தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் கூறினார்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் துப்புரவு தொழிலாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுகூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் கிர்மாணி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. துப்புரவு தொழிலாளர்களை நுண்ணுயிர் கிருமிகள் எளிதில் தாக்கி, நோய்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பணியின் போது பாதுகாப்பு கவசங்களை அணிந்து துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். சுகாதார ஆய்வாளர்கள் இதுகுறித்த விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வருகிற ஜனவரி மாதம் மத்திய அரசு, மாநில அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். தாட்கோ மூலம் துப்புரவு தொழிலாளர்களுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்குவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. 2020-ம் ஆண்டிற்குள் அனைத்து துப்புரவு தொழிலாளர்களுக்கு சொந்த வீடு கட்டித்தரப்படும். வீடுகளில் சென்று குப்பைகளை சேகரிக்கும் போதே, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை பணிக்கு அனுப்ப வேண்டும். மேலும், கும்பகோணத்தில் சோதனை அடிப்படையில் ‘ரோபோ’ மூலம் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனை வெற்றி பெற்ற பின்பு திருப்பூர் மாவட்டத்திலும் ‘ரோபோ’ அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பலவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள துப்புரவு பணியாளர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். ஆஸ்பத்திரி துப்புரவு பணியாளர்களிடம், போதிய ஊதியம் கொடுக்கப்படுகிறதா? என்றும், பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்துகிறீர்களா? என்றும் கேட்டறிந்தார். மேலும், தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ. மற்றும் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுகிறதா? என்பது குறித்தும், ஒப்பந்தம் எடுத்துள்ள நிர்வாக ஊழியர்களிடம் கேட்டறிந்தார். மேலும், ஆஸ்பத்திரியில் பணியாற்றும் சுகாதார பணியாளர்களின் பெயர்கள், அவர்களின் ஊதியம், ஊதியத்தில் இருந்து இ.எஸ்.ஐ., வருங்கால வைப்புநிதி பிடித்தம் செய்வதற்கான சான்றுகளை சமர்ப்பிக்கும் படி நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது தங்களுக்கு சம்பளம் குறைவாக வழங்கப்படுவதாகவும், சம்பளத்தை அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாரவிடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சில சுகாதார பணியாளர்கள் கண்கலங்க கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட அவர் இதன் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்வதாகவும், ‘ஒப்பந்த பணியாளர்களாக இருக்கும் உங்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்கிறேன்’ என்றும் உறுதியளித்தார். இதனால் சுகாதார பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார்.
இந்த ஆய்வின் போது சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.