2½ வயது குழந்தையுடன் கடலில் குதித்து இளம்பெண் தற்கொலை பட்டினப்பாக்கம் கடற்கரையில் உடல்கள் கரை ஒதுங்கின
2½ வயது பெண் குழந்தையுடன் கடலில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இருவரின் உடல்களும் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரை ஒதுங்கின.
அடையாறு,
சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் பரத். தங்க நகைகள் செய்யும் தொழிலாளியான இவர், அதே பகுதியில் நகை பட்டறை வைத்து உள்ளார். இவருடைய மனைவி காமினி (வயது 24). இவர்களுக்கு 2½ வயதில் தனுஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது.
நேற்று முன்தினம் மாலை பால் வாங்க செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து தனது குழந்தையுடன் வெளியே சென்ற காமினி, இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பரத், பல்வேறு இடங்களில் தேடியும் இருவரையும் காணவில்லை.
பின்னர் தனது மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை என வேப்பேரி போலீஸ் நிலையத்தில் பரத் புகார் செய்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் ஒரு இளம்பெண் மற்றும் பெண் குழந்தையின் உடல் கரை ஒதுங்கியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள், பட்டினப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இன்ஸ்பெக்டர் சிபுகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் இருவரும் யார்? என பட்டினப்பாக்கம் போலீசார் விசாரித்து வந்தனர்.
அப்போது தனது மனைவி-குழந்தையை காணவில்லை என வேப்பேரி போலீஸ் நிலையத்தில் பரத் புகார் அளித்து இருப்பது தெரிந்தது. இதுபற்றி வேப்பேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் பரத்தை ராஜீவ்காந்தி அரசு மருந்துவமனைக்கு அழைத்துச்சென்று பிணவறையில் வைக்கப்பட்டு இருந்த இளம்பெண், குழந்தையின் உடலை காண்பித்தனர்.
அதை பார்த்த பரத், அது மாயமான தனது மனைவி காமினி, குழந்தை தனுஸ்ரீ என அடையாளம் காண்பித்தார். காமினி தனது குழந்தையுடன் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இருவரின் உடல்களையும் பார்த்து பரத் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
இதுபற்றி பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காமினியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். காமினிக்கு திருமணமாகி 3½ ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.