குமாரச்சேரி, குணகரம்பாக்கம் ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாமில் 142 பேர் மனு
குமாரச்சேரி, குணகரம்பாக்கம் ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம் நடந்தது. அதில் 142 பேர் மனுக்கள் அளித்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் குமாரச்சேரி ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு வருவாய் அலுவலர் செல்வபாரதி தலைமை தாங்கினார். குமாரச்சேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏகவல்லி லோகநாதன், ஊராட்சி செயலாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் பாரதிபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மண்டல துணை தாசில்தார் வெங்கடேஷ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து 112 கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இந்த கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் வீட்டுமனைபட்டா, முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் என பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மண்டல துணை தாசில்தார் அதன்மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதில் கிராம உதவியாளர்கள் சரவணன், ஆனந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் குணகரம்பாக்கம் ஊராட்சி மகாதேவிமங்கலம் பகுதியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ரவிசந்திரன் தலைமையில் நடைபெற்ற முகாமிற்கு சமூகநலத்துறை தனி தாசில்தார் கவிதா, மண்டல துணை தாசில்தார் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. கே.பழனி கலந்துகொண்டு ஊராட்சியை சேர்ந்த 23 பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இதில் முதியோர் உதவித்தொகை, பட்டா உட்பிரிவு, ரேஷன் கார்டில் பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக சுமார் 30 பேர் மனுக்களை வழங்கினர். முகாமில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் எறையூர் முனுசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போந்தூர் செந்தில்ராஜன், முன்னாள் ஒன்றியகுழு தலைவர் சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.