புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக நிவாரணம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் - பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் நடந்தது
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக நிவாரணம் வழங்காததை கண்டித்து பட்டுக்கோட்டையில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பட்டுக்கோட்டை,
கஜா புயல் நிவாரணம் முறையாக வழங்காத தமிழக அரசை கண்டித்தும், பேரிடர் நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி எஸ்.எஸ். பழனிமாணிக்கம் பேசும் போது கூறியதாவது:-
கடைமடை பாசன பகுதியான பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகாக் களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வராததால் விவசாயம் பாதிக்கப்பட்டது. தற்போது கஜா புயலால் தென்னை மரங்களும் சாய்ந்து விழுந்துள்ளன. தஞ்சை மாவட்ட கலெக்டர் உடனடியாக வங்கியாளர்களை கூட்டி கடன் வசூலை ஒத்திவைத்து புதிய கடன் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை வங்கியில் செலுத்தப்படுகிறது. அந்த தொகையை வங்கியில் வாங்கிய கடனுக்கு எடுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் நிவாரண தொகையை மக்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும். விவசாய கடன், வங்கிக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். பாதிப்பை முழுமையாக கணக்கீடு செய்து தென்னை விவசாயிகளுக்கு முழு மானியம் வழங்க வேண்டும். சேதம் அடைந்த விசைப்படகு, நாட்டுப்படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கா.அண்ணாதுரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி, மாநில காங்கிரஸ் துணை தலைவர் கலைச்செல்வன், தி.க. மாவட்ட செயலாளர் வீரையன், ம.தி.மு.க. நகர செயலாளர் செந்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம், முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெயினுலாப்தீன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சி பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
முடிவில் பட்டுக்கோட்டை நகர தி.மு.க பொறுப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.