மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க கோரிக்கை

அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் வழங்கக்கோரி ராயமுண்டான்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-13 22:30 GMT
திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக விவசாயிகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பயிர்க்கடனை பாரபட்சமின்றி அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் வழங்கக்கோரியும், பயிர்க்கடன் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதை கண்டித்தும் பூதலூர் அருகே ராயமுண்டான்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் பூதலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தமிழரசன், மருதமுத்து, ராஜாங்கம், வியாகுலதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். 

மேலும் செய்திகள்