மணல் கடத்தலை தடுக்க முயன்ற பெண் வருவாய் ஆய்வாளரை லாரியை ஏற்றி கொல்ல முயற்சி டிரைவர் கைது

மணல் கடத்தலை தடுக்க முயன்ற பெண் வருவாய் ஆய்வாளரை லாரியை ஏற்றி கொல்ல முயன்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-12-13 22:30 GMT
ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே மணல் கடத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து சுங்குவார்சத்திரம் வருவாய் ஆய்வாளர் செந்தில்சரம் அதிகாரிகளுடன் சுங்குவார்சத்திரம்-மதுரமங்கலம் சாலை சோகண்டி என்னும் இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி கொண்டு வேகமாக லாரி ஒன்று வந்தது.

வருவாய் ஆய்வாளர் செந்தில்சரம் லாரியை நிறுத்தும்படி சைகை காட்டினார். டிரைவர், செந்தில்சரம் மீது லாரியை ஏற்றி கொல்ல முயன்றார்.

அவர் விலகியதால் தப்பித்து கொண்டார். வருவாய்த்துறையினர் டிரைவரை விரட்டி பிடித்து சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் வருவாய் ஆய்வாளரை லாரியை ஏற்றி கொல்ல முயன்றவர் சுங்குவார்சத்திரத்தை அடுத்த குணகரபாக்கம் பகுதியை சேர்ந்த காந்தி என்ற ஜனார்த்தனம் (வயது 30) என்பது தெரியவந்தது.

போலீசார் அவரை கைது செய்து மணல் கடத்தலுக்கு பயன் படுத்திய பொக்லைன் எந்திரம், லாரி, டிராக்டர் போன்றவற்றை கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்