உளுந்தூர்பேட்டை அருகே: விடுதியில், தூக்கில் தொங்கிய மாணவி சிகிச்சை பலனின்றி சாவு

உளுந்தூர்பேட்டை அருகே விடுதியில், தூக்கில் தொங்கிய மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Update: 2018-12-12 22:15 GMT
உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபி. இவருடைய மகள் லாவண்யா(வயது 16). இவர் உளுந்தூர்பேட்டை அடுத்த எ.குமாரமங்கலத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளி வளாகத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி, அதே பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி பள்ளியில் நடைபெற்ற அரையாண்டு தேர்வை லாவண்யா எழுதினார். பின்னர் அறைக்கு சென்ற மாணவி மதியம் உணவு சாப்பிட வரவில்லை.

இதையடுத்து சக மாணவிகள் லாவண்யாவின் அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் லாவண்யா கிடந்தார்.

இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கும் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லாவண்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாவண்யா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்