ராமநாதபுரம் அருகே பிரப்பன்வலசையில் இறை இல்லம் திறப்பு விழா நாளை நடக்கிறது
ராமநாதபுரம் அருகே பிரப்பன்வலசையில் புதிய இறை இல்லம் திறப்பு விழா நாளை நடக்கிறது.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் பிரப்பன்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட அலி நகரில் உலக தரம் வாய்ந்த புதிய இறை இல்லம் கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு மேல் ஜாமியா மஸ்ஜித் அலி நகர் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் தலைமையில் பெர்சத்துவான் அலிநகர் முஸ்லிம் ஜமாத் மலேசியா நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், ஐக்கிய அமீரக கல்ப் அலிநகர் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.
அலிநகர் ஜாமியா மஸ்ஜித் முன்னாள் தலைமை இமாம் முனவர் ஹசன் நூரி கிராஅத் ஓதுகிறார். அதனை தொடர்ந்து முன்னாள் ஊராட்சி தலைவரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான அலிநகர் ஜமாத் கமிட்டி தலைவர் புரவலர் ராஜாமுகமது வரவேற்று பேசுகிறார். பின்னர் அலிநகர் தலைமை இமாம் செய்யது அபுபக்கர் சித்திக் சித்தாரி பாஜின் மன்பாஇ தலைமையுரையாற்றுகிறார். நிகழ்ச்சிகளை வேதாளை ஹனபி பள்ளி தலைமை இமாம் பக்கீர் முகமது ஜலாலி தொகுத்து வழங்குகிறார். உலக தரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான இறை இல்லத்தை மலேசிய கோலாலம்பூர் டத்தோ டாக்டர் நூருல் அமீன், சமுதாய செம்மலும் கோலாலம்பூர்-மலேசியா அலி மாஜூ குரூப் ஆப் கம்பெனியின் சேர்மன் டத்தோ ஜவகர் அலி, கோலாலம்பூர்-மலேசியா மெட்ரோ செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனர் அப்துல் காதிர் ஹசன் அலி ஆகியோர் திறந்து வைக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை ஜே.எம்.எஸ். அரபுக்கல்லூரி நிறுவனர் முகமது அஸ்ரப் அலி, ஹல்ரத்கிப்லா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகிறார். திருநெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்த உஸ்மானியா அரபிக்கல்லூரி பேராசிரியர் ஹாஜாமுய்னுதீன் ஆலிம் விழா பேருரையாற்றுகிறார். அதன் பின்னர் இறை இல்லத்தை வடிவமைத்து கட்டி முடித்த ரெத்னா பில்டர்ஸ் தலைமை பொறியாளர் பால்பாண்டியனை அலிநகர் முஸ்லிம் ஜமாத்தினர், ஜாமியா பள்ளி ஜமாத் கமிட்டியினர், சற்குண சன்மார்க்க சங்க நிர்வாகிகள், மலேசியா மற்றும் அமீரக முஸ்லிம் ஜமாத்துகளின் நிர்வாகிகள் நினைவு பரிசுகளை வழங்கி கவுரவிக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு பிரப்பன்வலசை பஸ் நிறுத்தம் முதல் அலிநகர் வரை வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுஉள்ளது. மேலும் முக்கிய பிரமுகர்களை வரவேற்கும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த உலமாக்களும், ஜமாத் நிர்வாகிகளும், சமுதாய தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். திறப்பு விழாவை முன்னிட்டு மலேசியா, சிங்கப்பூர், துபாய், சவுதி அரேபியா உள்ளிட்ட பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் நடத்தி வரக்கூடிய அலிநகரை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அலிநகர் முஸ்லிம் ஜமாத் கமிட்டியினர் மற்றும் சற்குண சன்மார்க்க சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர்.