ரூ.15 லட்சத்தில் பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் கலெக்டர் ஷில்பா திறந்து வைத்தார்

திசையன்விளை அருகே உள்ள கரைசுத்து நவ்வலடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் செலவில் புதிதாக பஞ்சாயத்து அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

Update: 2018-12-12 22:00 GMT
திசையன்விளை, 

திசையன்விளை அருகே உள்ள கரைசுத்து நவ்வலடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் செலவில் புதிதாக பஞ்சாயத்து அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. 

அதன் திறப்பு விழா நடந்தது. இன்பதுரை எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஷில்பா புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். பின்னர் அவர் மரக்கன்றுகள் நட்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட இயக்குனர் பழனி, திசையன்விளை தாசில்தார் தாஸ்பிரியன், ராதாபுரம் யூனியன் ஆணையாளர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிளாரன்ஸ் விமலா, என்ஜினீயர் சிவபிரகாஷ், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, தட்சணமாற நாடார் சங்க முன்னாள் தலைவர் சபாபதி நாடார், நவ்வலடி சரவணகுமார், ஜெயலலிதா பேரவையை சேர்ந்த ஜெயக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ராதாபுரத்தில் ரூ.76 லட்சம் மதிப்பீட்டில் புதிய பத்திர பதிவு அலுவலகம் அமைக்கும் பணிக்கு, இன்பதுரை எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் ராதாபுரம் ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் அருண் புனிதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்