மொபிகேஸ் வொர்க் ஸ்டேஷன் பேக்
அலுவலகம் செல்வோருக்கு வசதியாக அனைத்துப் பொருட்களையும் எடுத்துச் செல்ல ஏதுவாக வடிவமைக்கப்பட்டதுதான் இந்த பேக்.
இது உங்கள் பணிகளை எளிதாக்கும், பொருட்கள் மறந்து போவதைத் தவிர்க்கவும் உதவும். டயரி, பேனா, சார்ஜர், பவர் பேங்க் உள்ளிட்டவற்றை வைக்க தனித்தனி இட வசதி இதில் உள்ளது. அத்துடன் லேப் டாப்பை உங்களுக்கு வசதியான கோணத்தில் வைத்து செயல்படுத்தும் வசதியும் இதில் உள்ளது. லேப்டாப்பை பேக் மீது வைத்துவிட்டு வெளிப்பகுதியில் கீ-போர்டை வைத்து செயல்படுத்தலாம். இதன் விலை 126 டாலராகும்.