நெல்லையில் தமிழர் விடுதலைக்களம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் தமிழர் விடுதலைக்களம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-11 22:00 GMT
நெல்லை, 

நெல்லையில் தமிழர் விடுதலைக்களம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் 

தமிழர் விடுதலைக்களம் கட்சியினர் நெல்லை சந்திப்பு ரெயில்நிலையம் முன்பு நேற்று காலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் முத்துகுமார் தலைமை தாங்கினார். மாநகர தலைவர் சுபாஷ்பாண்டியன், செயலாளர் மணிபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கட்சியின் நிறுவன தலைவர் ராஜ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார்.

கோரிக்கை 

தமிழகத்தில் உழவுத்தொழிலை பூர்வீக தொழிலாக கொண்டு வாழ்ந்து வருகின்ற குடும்பர், பண்ணாடி, காலடி, கடையர், தேவேந்திர குலத்தார், வாதியார், பள்ளர் ஆகிய உட்பிரிவுகளாக உள்ள அனைவரையும் ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும் என்று மத்திய– மாநில அரசுகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் சேகர், வக்கீல் வேங்கைராஜா, மாவட்ட தலைவர்கள் சாமி, மாரியப்பன், செயலாளர்கள் கட்டபொம்மன், சுரேஷ் பாண்டியன், ஜெயராஜ் பாண்டியன், மங்களராஜ் பாண்டியன், இளைஞர் அணி செயலாளர் லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்