அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம்

அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. டெங்கு விழிப்புணர்வு திட்ட அதிகாரி சுந்தர்ராஜன் ஊர்வலத்துக்கு தலைமை தாங்கினார்.

Update: 2018-12-06 21:30 GMT
அரியாங்குப்பம்,

மலேரியா நோய் தடுப்பு இணை இயக்குனர் கணேசன் முன்னிலை வகித்தார். அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி கதிரவன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது டெங்கு மற்றும் மலேரியா தடுப்பு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

அரியாங்குப்பம் இமாகுலேட் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தவளக்குப்பம், முதலியார்பேட்டை மற்றும் முருங்கப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய தொழில்நுட்ப அதிகாரிகள், ஆய்வாளர்கள், துணை சுகாதார உதவியாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு கருத்தரங்கு நடந்தது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் அச்சுதன் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்