மாநில ஜிம்னாஸ்டிக் போட்டியில் சாதனை: சேலம் வீரர், வீராங்கனைகளுக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையேயான ஜிம்னாஸ்டிக் போட்டி கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இதில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டல அணியில் 30 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

Update: 2018-12-04 21:52 GMT
சேலம்,

இதில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சேலத்தை சேர்ந்த தர்ஷன், நிரஞ்சன், பிரபஞ்சன் ஆகியோரும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மோகன்ராஜியும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் அன்புதாஸ், திவோதம், தர்னிஷ் ஆகியோரும் தங்கப்பதக்கம் வென்றனர். இதுதவிர 10 வெள்ளிப்பதக்கமும், 3 வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

மேலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை சேலம் மண்டல அணி வென்று சாதனை படைத்தது. பதக்கம் வென்ற சேலம் வீரர், வீராங்கனைகள் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரை சந்தித்து பதக்கம், சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவர்களை போலீஸ் கமிஷனர் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் சங்க பொதுச்செயலாளர் குமார், புனித ஜான்ஸ் பள்ளி முதல்வர் சகாயராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்