சேலம் சரகத்தில் 13 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

சேலம் சரகத்தில் 13 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2018-12-04 21:49 GMT
சேலம்,

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 9 பேர் சமீபத்தில் சேலம் போலீஸ் சரகத்திற்கு இடமாறுதலாகி வந்தனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்த அந்த 9 பேருக்கும், சரகத்தில் வெவ்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றிய 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கும் புதிய பணியிடம் ஒதுக்கி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தர்மபுரி மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு 3-க்கும், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் சேலம் மாவட்டம் காரிப்பட்டிக்கும், இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ஜான்சி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தர்மபுரி மாவட்டம் தொப்பூருக்கும், இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதேபோல் இன்ஸ்பெக்டர் துரைராஜ் கிருஷ்ணகிரி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கும், இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜ கடைக்கும், இன்ஸ்பெக்டர் ரமேஷ் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கும், வெங்கடாஜலபதி நாமக்கல் மாவட்ட ஆயுதப்படைக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் திருச்செங்கோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தர்மபுரி மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்றதடுப்பு பிரிவு-4க்கும், நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் ஜெயவேல் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவுக்கும், நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் நாமக்கல் ஆயுதப்படைக்கும், அங்கு பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் கணேசன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படைக்கும் இடமாற்றம் செய்யப் பட்டனர்.

இதற்கான உத்தரவை சேலம் சரக டி.ஐ.ஜி. செந்தில்குமார் பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்