செய்யாறு கல்வி மாவட்டத்தின் சார்பில் ரூ.13¾ லட்சம் நிவாரண பொருட்கள்

செய்யாறு, வந்தவாசி மற்றும் வெம்பாக்கம் தாலுகா உள்ளடக்கி செய்யாறு கல்வி மாவட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, நகராட்சி, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய பணமாகவும், துணி மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவை பெறப்பட்டது.

Update: 2018-12-04 22:15 GMT
செய்யாறு,

பெறப்பட்ட தொகைக்கு மளிகை பொருட்கள் வாங்கி தனித்தனியாக ஒவ்வொரு துணிப்பையிலும் 5 கிலோ அரிசி, 1 கிலோ துவரம்பருப்பு, ½ கிலோ உளுந்தம்பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட 19 வகையான அத்தியாவசிய மளிகை பொருட்கள் 2 ஆயிரத்து 200 குடும்பத்தினருக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதையடுத்து செய்யாறு மாவட்ட கல்வி அலுவலகத்தில் நிவாரண பொருட்களை மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) பி.நடராஜன் லாரி மூலம் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தார். மொத்தம் ரூ.13 லட்சத்து 85 ஆயரம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரிடையாக வழங்கப்படுகிறது. இதற்காக 10 தன்னார்வ ஆசிரியர்கள் சென்றுள்ளனர் என்று மாவட்ட கல்வி அலுவலர் கூறினார்.

அப்போது பள்ளி துணை ஆய்வாளர் எஸ். புகழேந்தி, தலைமை ஆசிரியர் எம்.எஸ்.சுகானந்தம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்