குள்ளக்காலிபாளையத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்; கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

குள்ளக்காலிபாளையத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

Update: 2018-12-03 22:30 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது தாராபுரம் குள்ளகாலிபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

தாராபுரம் குள்ளக்காலிபாளையத்தில் பல ஆண்டுகளாக 25–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலும் கூலித்தொழிலாளர்கள். நாங்கள் சொந்த வீடுகள் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். பலர் வீட்டில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே எங்களுக்கு உடனே வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் விரைவாக அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்