மணவாளக்குறிச்சி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி பெண் தற்கொலை

மணவாளக்குறிச்சி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-12-03 22:15 GMT
மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி அருகே பம்மத்துமூலை பகுதியை சேர்ந்தவர் ஜாண்சன், பால் வியாபாரி. இவருடைய மகள் ஆனந்த ஜோதி (வயது 27). பி.ஏ. பட்டதாரியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனக்கு நிரந்தர வேலை கிடைத்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார்.

இதற்காக பல்வேறு இடங்களில் வேலை தேடினார். ஆனாலும், வேலை கிடைக்கவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று ஆனந்த ஜோதி வி‌ஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக திங்கள்நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜாண்சன் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நிரந்தர வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி பெண் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்