நவீன ‘புற்றுநோய்’ ஆராய்ச்சி

உடல் பருமன், பல்வேறு உடல்நலக்குறைபாடுகளுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதை சார்ந்தவர்களும் உடல் பருமன் பிரச்சினைக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள்.

Update: 2018-12-02 09:14 GMT
டல் பருமன், பல்வேறு உடல்நலக்குறைபாடுகளுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதை சார்ந்தவர்களும் உடல் பருமன் பிரச்சினைக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இளம் வயதினரும் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகிறார்கள். உடல் பருமன் கொண்டவர்களுக்கு கணைய புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இஸ்ரேலை சேர்ந்த டெல் அவிவ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 10 லட்சத்து 87 ஆயிரத்து 358 ஆண்களையும், 7 லட்சத்து 7 ஆயிரத்து 212 பெண்களையும் ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் 16 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள். ஆய்வின் முடிவில், இயல்பான எடை கொண்டவர்களுடன் ஒப்பிடுகையில் உடல் பருமன் அதிகமுள்ள ஆண்களுக்கு 3 மடங்கு அதிகமாக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பாதிப்பு பெண்களுக்கு 4 மடங்கு அதிகமாக இருக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் உயரத்திற்கேற்ற அளவு உடல் எடையை கட்டுக்குள் வைத்திருங்கள்.

மேலும் செய்திகள்