பொங்கலூர் அருகே சமையல் செய்தபோது தீயில் கருகிய பெண் பலி காப்பாற்ற முயன்ற கணவரும் உயிரிழந்த பரிதாபம்
பொங்கலூர் அருகே சமையல் செய்தபோது தீயில் கருகிய பெண் பலியானார். காப்பாற்ற முயன்ற அவருடைய கணவரும் உயிரிழந்தார்.
பொங்கலூர்,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே உள்ள பெருந்தொழுவு, கோட்டை மேட்டை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி(வயது 48). இவரது மனைவி வள்ளி(47). இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 26-ம் தேதி இரவு சுமார் 7 மணியளவில் வீட்டில் உள்ள மண்எண்ணெய் அடுப்பில் வள்ளி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வள்ளியின் சேலையில் தீ பற்றிக் கொண்டது. இதனால் அவருடைய உடல் முழுவதும் தீ பிடித்ததில் வலியால் வள்ளி அலறி துடித்து சத்தம் போட்டார்.
அப்போது வீட்டில் இருந்த பாலசுப்பிரமணி சமையல் அறைக்கு ஓடிச்சென்று மனைவியை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் தீ பரவியது. இதனால் இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் சுமார் ஒரு மணியளவில் பாலசுப்பிரமணி உயிரிழந்தார். பின்னர் மாலை 6 மணிக்கு அவரது மனைவி வள்ளியும் பரிதாபமாக உயிரிழந்தார். தீயில் கருகி கணவன்-மனைவி இருவரும் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.