அ.தி.மு.க. பெண் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி போதகர் கைது
தோவாளை அருகே அ.தி.மு.க. பெண் பிரமுகரிடம் ரூ.10½ லட்சம் மோசடி செய்த போதகரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்,
தோவாளை அருகே தாழக்குடி கண்டமேட்டு காலனியை சேர்ந்தவர் ராமசந்திரன், தோவாளை ஒன்றிய அ.தி.மு.க. அவை தலைவராக உள்ளார். இவருடைய மனைவி லதா ராமசந்திரன். இவர் அ.தி.மு.க. மாவட்ட இணை செயலாளராக இருக்கிறார்.
இந்த நிலையில் லதா ராமசந்திரன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நான் அ.தி.மு.க. கட்சியில் பொறுப்பு வகித்து வருகிறேன். மக்கள் பிரச்சினைக்காக அடிக்கடி சென்னை தலைமை செயலகத்துக்கு சென்று வருவேன். அப்போது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த ஜோன்ஸ் (வயது 38) என்பவர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் போதகர் ஆவார்.
பின்னர் அவர் ஒரு நாள் என்னிடம் பேசுகையில் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறினார். மேலும் பலருக்கு வேலை மற்றும் பணிமாறுதல் வாங்கி கொடுத்ததாக கூறினார். இதை நான் நம்பினேன். அதைத் தொடர்ந்து அவர், என் மகனுக்கு செய்தி மக்கள் தொடர்பு உதவி அதிகாரி வேலை வாங்கி தருவதாக கூறி என்னிடம் இருந்து ரூ.10 லட்சத்து 75 ஆயிரம் வாங்கினார். அதன் பிறகு என் சகோதரி மகளுக்கு அரசு மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சம் பெற்றுக் கொண்டார். ஆனால் அவர் கூறியது எதையும் செய்யவில்லை.
இதனால் நான் பணத்தை திருப்பிக் கேட்டேன். ஆனால் அவர் கொடுக்கவில்லை. எனினும் நான் தொடர்ந்து கேட்டதால் ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்தை திரும்ப கொடுத்தார். மீதம் உள்ள ரூ.10 லட்சத்து 45 ஆயிரம் கொடுக்காமல் மோசடி செய்து விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு மீது விசாரணை நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து போதகர் ஜோன்சை நேற்று கைது செய்தனர்.