புகளூர் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
புகளூர் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் அன்பழகன் கூட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் வேளாண்மை இணை இயக் குனர் ஜெயந்தி மற்றும் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் லியாகத் ஆகியோர் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். குப்புச்சிபாளையத்தை சேர்ந்த விவசாயி சந்திரசேகர் பேசுகையில், வேளாண்மை துறை மூலமாக அனைத்து வட்டாரங்களிலும் சிறு தானிய விதைகள் தடையின்றி கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும். கரூர் மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் சேதமடைந்த நெல், துவரை பயிர்களுக்கு உரிய நிவாரணம் கொடுக்க வேண்டும் என்றார்.
சுக்காம்பட்டியை சேர்ந்த விவசாயி பழனிவேல் பேசுகையில், கடவூர் மற்றும் கிருஷ்ண ராயபுரம் வட்டத்தில் அமைந்துள்ள ஏரியில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதித்து ஏரியை தூர்வாரி தண்ணீர் சேமித்து வைக்க உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த நிர்வாகி ராஜேஸ்வரி பேசுகையில், கரூர் மாவட்டம் மணத்தட்டையிலுள்ள மணல்குவாரி யினால் நீராதாரம் பாதிக்கப்படுவது குறித்து கோர்ட்டு உத்தரவு உள்ளிட்டவற்றை சுட்டி காட்டி மனு கொடுத்தும், கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியும் மாவட்ட நிர்வாகம் உரிய பதில் அளிக்காதது ஏன்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தும், அந்த மனுவை ஏற்று விவாதபொருள் பட்டியலில் சேர்க்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார். அப்போது மணல் பிரச்சினை என்பது விவசாயிகளின் கோரிக்கைக்குள் வராது என அதிகாரிகள் தெரிவித்தனர். உடனே ராஜேஸ்வரிக்கு ஆதரவாக பேசிய விவசாயிகள், தற்போது மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது. இதன் மூலம் மேட்டூர் அணைக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக்கூடும். மேலும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். காவிரி ஆற்றில் தடுப்பணையை போல் ஆற்று மணல் அதிகம் இருந்தால் தான் நிலத்தடி நீர்மட்டம் சீராக இருக்கம். விவசாய கிணறுகளில் தண்ணீர் கிடைக்கும் என்று தெரிவித்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கரூரை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதி சண்முகம் பேசுகையில், தாந்தோன்றிமலை ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் பாசனத்திற்காக தண்ணீரை கொண்டு செல்ல முடிவதில்லை. இதனால் ஏக்கர் கணக்கில் விவசாய நிலம் இருந்தும் அதில் விவசாயம் செய்ய முடியவில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற வேண்டும். நீராதாரங்களை சுருக்கி விவசாயம் செய்வது குறைவதால் வருங் காலங்களில் சோமாலியா உள்ளிட்ட நாடுகளை போல் தமிழகத்திலும் உணவு பஞ்சம் ஏற்படுமோ? என அச்சமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
புகளூர், வாங்கல், நெரூர் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க பிரதிநிதி சுப்ரமணியன் உள்ளிட்ட விவசாயிகள், புகளூர் வாய்க்காலில் காகித ஆலையின் கழிவுநீர் கலப்பதால் மாசுபாடு ஏற்படுவதாக குற்றம் சாட்டி பாட்டில்களில் கழிவுநீரை எடுத்து வந்து வேளாண் அதிகாரி ஜெயந்தியிடம் காண்பித்து மனு கொடுத்தனர். அதில், காகித ஆலை கழிவுநீர் வாய்க்காலில் செல்வதால் அப்பகுதியில் வாழை, கரும்பு, நெல், வெற்றிலை பயிரிட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே புகளூர் வாய்க்காலை சுத்தம் செய்து, அதில் கழிவுநீர் கலக் காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். புகளூர் வாய்க்காலில் கழிவு நீரை கலக்காமல் அதனை மறுசுழற்சி செய்யும் வகையில் காகித ஆலைக்கு அறிவுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பதில் கூறினார்.
இதேபோல் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தின் முடிவில் வேளாண் அதிகாரி ஜெயந்தி தெரிவித்தார். இதில், கூட்டுறவு சங்கங் களின் இணை பதிவாளர் சீனிவாசன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மோகன்ராம், தரக்கட்டுப்பாடு வேளாண் உதவி இயக் குனர் குழந்தைவேலு உள்பட அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.