10 ரூபாய் நாணயம் வாங்க மறுத்தால் கடும் நடவடிக்கை; கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை
10 ரூபாய் நாணயம் வாங்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கதிரவன் எச்சரித்துள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:–
வங்கிகள், வியாபாரிகள், பொதுமக்கள், அரசுத்துறை சார்ந்த நிறுவனங்கள் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக புகார்கள் வந்து கொண்டு இருக்கிறது. ரிசர்வ் வங்கி நாணயச்சட்ட விதிப்படி 10 ரூபாய் நாணயம் தொடர்ந்து செல்லத்தக்கது ஆகும். எனவே மேற்கூறியவர்கள் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் 10 ரூபாய் நாணயங்கள் இங்கே ஏற்றுக்கொள்ளப்படும் என்கிற தகவல்களை பொதுமக்கள் பார்வைக்கு தெரியும்படி தவறாது தங்கள் நிறுவனத்தில் ஒட்ட வேண்டும். மேலும் இதுதொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.