ஈரோட்டில் ஜாக்டோ–ஜியோவினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்ட ஜாக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். பாஸ்கர்பாபு முன்னிலை வகித்தார்.

Update: 2018-11-30 22:07 GMT

ஈரோடு,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய உயர்வில் வழங்கப்படாமல் உள்ள 21 மாத கால ஊதிய உயர்வு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணி செய்து வருவோரை, காலமுறை ஊதியத்தின் கீழ் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு பணிக்கு எதிராகவும், பணி நியமனங்களுக்கு தடையாகவும் உள்ள அரசாணை எண் 51–யை ரத்து செய்ய வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை குறைவு உள்ளிட்ட காரணங்களை கூறி, 5 ஆயிரம் பள்ளிகளை விரைவில் மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்