பெங்களூருவில் ரூ.25 ஆயிரம் கோடியில் உயர்த்தப்பட்ட சாலை அமைப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை

பெங்களூருவில் ரூ.25 ஆயிரம் கோடியில் உயர்த்தப்பட்ட சாலை அமைப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.

Update: 2018-11-29 23:57 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் போக்கு வரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உயர்த்தப்பட்ட சாலை அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் குமாரசாமி அறிவித்தார். அந்த திட்டம் குறித்து உயர் அதிகாரி களுடன் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் பொதுப் பணித்துறை மந்திரி எச்.டி. ரேவண்ணா உள்பட அதி காரிகள் பலர் கலந்து கொண்டனர். ஆலோசனைக்கு பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

ரூ.7,224 கோடியில் ஹெப்பால்-சில்க்போர்டு இடையே 26.89 கிலோ மீட்டர் நீளத்திற்கும், கே.ஆர்.புரம்-கொரகுன்டேபாளையா இடையே ரூ.6,245 கோடியில் 20.95 கிலோ மீட்டர் நீளத்திற்கும், வர்த்தூர் கோடி-மைசூரு ரோடு இடையே ரூ.7,083 கோடியில் 29.48 கிலோ மீட்டர் நீளத்திற்கும், செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனை-அகரா இடையே ரூ.826 கோடியில் 4.48 கிலோ மீட்டர் நீளத்திற்கும், அல்சூர்-டிசோசா சர்க்கிள் இடையே ரூ.733 கோடியில் 2.80 கிலோ மீட்டர் நீளத்திற்கும், வீலர்ஸ்ரோடு சந்திப்பு-கல்யாண்நகர் இடையே ரூ.1,653 கோடியில் 6.46 கிலோ மீட்டர் நீளத்திற்கும், ராமமூர்த்திநகர்-ஐ.டி.பி.எல். இடையே ரூ.1,731 கோடியில் 10.99 கிேலா மீட்டர் நீளத்திற்கும் உயர்த்தப்பட்ட 4 வழிச்சாலை அமைக்கப்படும்.

மொத்தம் ரூ.25 ஆயிரத்து 495 கோடி செலவில் 102 கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்த உயர்த்தப்பட்ட சாலை அமைக்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் இந்த திட்டத்திற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட சாலைகள், மெட்ரோ ரெயில் நிலையங்களுடன் இணைக்கப்படும்.

அரசு-தனியார் பங்களிப்பில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். இந்த திட்டத்திற்காக 3,700 மரங்கள் வெட்ட வேண்டிய நிலை உள்ளது. முடிந்தவரை மரங்களை வேரோடு எடுத்து, வேறு இடத்தில் நட முயற்சி செய்யப்படும். இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மேலும் செய்திகள்