பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வாணியங்குடி கிராமத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை,
இந்திய அரசு மக்கள் தொடர்பு கள அலுவலகம், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் மற்றும் சமூகநலத்துறை அலுவலகம் இணைந்து சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு தினம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாமை நடத்தியது.
சிவகங்கை ஒன்றியம் வாணியங்குடி கிராமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் தலைமை தாங்கினார்.
கள விளம்பர உதவி அலுவலர் ஜெயகணேஷ் வரவேற்றார். மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் வசந்தா மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
முன்னதாக நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தொடங்கி வைத்தார்.