நட்சத்திர ஓட்டலில் பொருட்களை சேதப்படுத்திய அண்ணன், தம்பி கைது

நட்சத்திர ஓட்டலில் பொருட்களை சேதப்படுத்திய அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-11-29 22:30 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தின் மைய பகுதியான காந்திரோட்டில் தனியார் நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் பார் வசதி உள்ளது. இந்த ஓட்டலில் உள்ள பாரில் நேற்று முன்தினம் ஒரு சிலர் மது குடிக்க சென்றனர். மது குடித்த அவர்கள் அங்கு இருந்த சுவிட்ச் பெட்டி மற்றும் பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஓட்டல் மேலாளர் வெங்கடாசலம், சின்ன காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார்.

காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில், சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொருட்களை சேதப்படுத்தியதாக காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம், சி.எஸ்.எம். தோப்பு தெருவை சேர்ந்த முத்து (வயது 23), அவரது தம்பியான அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் (21) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் இது குறித்து சின்ன காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்