விஷம் குடித்து பெண் தற்கொலை மதுகுடித்து விட்டு கணவர் வீட்டுக்கு வந்ததால் விபரீதம்
அருமனை அருகே மதுகுடித்து விட்டு கணவர் வீட்டுக்கு வந்ததால் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
அருமனை,
அருமனை அருகே கடையாலுமூடு, போங்கன்காலை பகுதியை சேர்ந்தவர் மணிராஜ், கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயந்தி (வயது 30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மணிராஜுக்கு மது பழக்கம் இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயந்தி நரம்பு நோயால் பாதிக்கப்பட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
மனைவி நோயால் பாதிக்கப்பட்டதால் மணிராஜ் சில நாட்கள் மது குடிக்காமல் இருந்துள்ளார். அத்துடன் மது பழக்கத்தை கைவிட்டதாக கூறி வந்துள்ளார்.
சம்பவத்தன்று மணிராஜ் மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி, கணவர் மீண்டும் மது பழக்கத்துக்கு அடிமையாகி விட்டாரே எனக்கருதி மனமுடைந்து விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் ஜெயந்தி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து கடையாலுமூடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுகுடித்து விட்டு கணவர் வீட்டுக்கு வந்ததால் பெண் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.