கள்ளக்காதலி வீட்டுக்கு சென்ற: தொழிலாளி மீது தாக்குதல் - தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு

தேனி அருகே கள்ளக்காதலி வீட்டுக்கு சென்ற தொழிலாளியை தாக்கிய தம்பதி உள்பட 3 பேர் மீது மீதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2018-11-28 22:00 GMT
தேனி,

தேனி அருகே உள்ள உப்புக்கோட்டையை சேர்ந்தவர் போஸ் (வயது 48). கூலித்தொழிலாளி. இவருக்கும் சடையால்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று போஸ் சடையால்பட்டியில் உள்ள கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணின் தம்பியான மதுரையை சேர்ந்த பால்பாண்டி, அவருடைய மனைவி ஈஸ்வரி, மகன் ராமர் ஆகியோர் அங்கு வந்துள்ளனர். அவர்கள் போசிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் பழனிசெட்டிபட்டி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பால்பாண்டி உள்பட 3 பேர் மீதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்