புதுச்சத்திரம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

புதுச்சத்திரம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-11-28 22:30 GMT
நாமக்கல்,

புதுச்சத்திரம் அருகே உள்ள 85.ஆர்.கொமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் வடிவேலு. தறிப்பட்டறை தொழிலாளி. இவரது மனைவி ஜெகதாம்பாள் (வயது 35). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். வடிவேலு நேற்று முன்தினம் வீட்டில் உள்ள தறியில் வேலை செய்து கொண்டு இருந்தார்.

அப்போது வீட்டில் உள்ள மற்றொரு அறையில் ஜெகதாம்பாள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். ஜன்னல் வழியாக புகை வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் சத்தம் போட்டனர். பின்னர் வடிவேலு, அவர்களின் உதவியுடன் ஜெகதாம்பாளை மீட்டு, ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன்இன்றி நேற்று அதிகாலை ஜெகதாம்பாள் பரிதாபமாக இறந்தார்.


இந்த தற்கொலை சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜெகதாம்பாள் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணம் அடையாததால் மனம் உடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்