வெவ்வேறு இடங்களில் பிளஸ்-2 மாணவி உள்பட 3 பேர் தற்கொலை
வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
ஓசூர்,
ஓசூர் சீதாராம்மேடு ஜலகண்டேஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் பிரபாகர் (வயது 55). தனியார் நிறுவன ஊழியர். வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் விஷம் குடித்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பிரபாகர் இறந்தார். இது குறித்து அட்கோ போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஓசூர் சிப்காட் சின்ன எலசகிரி காமராஜ் நகரைச் சேர்ந்தவர் தாமோதரன். இவரது மகள் மோனிகா (17). இருதய பிரச்சினையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த மோனிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதிராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சூளகிரி அருகே உள்ள போகிபுரத்தைச் சேர்ந்தவர் நாகன். இவரது மகள் கோமதி (17). இவர் சூளகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பவத்தன்று விஷம் குடித்த நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கோமதி இறந்தார். இது குறித்து சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.