உணவுப் பொருள் கெடாமல் பாதுகாக்க...
வீட்டில் தயார் செய்யப்படும் உணவுப் பொருட்களை கெடாமல் பாதுகாப்பது இல்லத்தரசிகளுக்கு மிகப் பெரும் சவால்தான்.
எவ்வளவுதான் பிரிட்ஜில் வைத்தாலும் பழங்களும், காய்கறிகளும் கெட்டுப் போவதைத் தவிர்க்க முடியவில்லை. இதை பாதுகாக்க குளிர் பதம் மட்டும் போதாது; காற்றுப் புகாத சூழலில் அவை பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கு உதவுவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது ஹாமில்டன் பீச் நிறுவனத்தின் நியூட்ரி பிரெஷ் வாக்குவம் சீலர்.
பொதுவாக பிளாஸ்டிக் பைகளில் உணவுப் பொருட்களை போட்டு வைத்தாலும் அவற்றை காற்று புகாத பையாக மாற்றுவது சாத்தியமில்லை. இதனால் வைக்கப்படும் உணவுப் பொருட்கள் எளிதில் கெட்டுப்போகும். ஆனால் நியூட்ரிபிரெஷ் வாக்குவம் சீலரில் பிளாஸ்டிக் கவரினுள் உள்ள காற்றை உறிஞ்சி அதை சீலிட்டு தருகிறது. இதனால் உணவுப் பொருட்கள் எளிதில் கெடுவதில்லை.
கடல் உணவுப் பொருட்கள், இறைச்சி, சீஸ், பழங்கள், காய்கறிகளை இவ்விதம் சீலிட்டு பிரிட்ஜினுள் வைத்தால் சீக்கிரம் கெட்டுப் போகாது. மிகவும் அடக்கமான அளவில் இது வந்துள்ளது. இதில் பொருட்களை சீலிடுவதற்கு ஏற்ற அளவீடுகள் உள்ளன. அதேபோல திரவ பொருட்களை சீலிடவும் இதில் வசதி உள்ளது. இதன் விலை 90 டாலராகும்.