கண்ணமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மாட்டுத் தரகர் சாவு
கண்ணமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மாட்டுத் தரகர் மரணமடைந்தார்.
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் காலனியை சேர்ந்த அச்சுதன் (வயது 55), மாட்டுத் தரகர். இவரது மனைவி பூபதி. இவர்களுக்கு வரலட்சுமி (25), ரோஜா (22), ஆனந்தி(15) ஆகிய 3 மகள்களும், பிரபு (23), ரங்கசாமி (19), ஆசைத்தம்பி (13) ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.
அச்சுதன் நேற்று காலை 6 மணியளவில் கண்ணமங்கலத்திற்கு வந்துவிட்டு பின்னர் தனது வீட்டுக்கு அரசு மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத மோட்டார்சைக்கிள் அச்சுதன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் நிற்காமல் சென்று விட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கண்ணமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மோதிவிட்டு நிற்காமல் சென்ற மோட்டார்சைக்கிள் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.