உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: நிலஅளவீடு செய்ய வந்த அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகை
உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உப்பிலியபுரம் அருகே நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
உப்பிலியபுரம்,
மின்வழிபாதை அமைப்பதற்காக திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதி கொப்பம்பட்டி குறுவட்டம், எரகுடி குறுவட்டம் ஆகிய பகுதிகளில் த.மங்கப்பட்டி, த.பாதர்பேட்டை, த.முருங்கப்பட்டி, த.வெள்ளாளப்பட்டிபுதூர், நாகநல்லூர், முத்தையம்பாளையம், நல்லமாத்தி கோம்பை, புளியஞ்சோலை, கோம்பை, பச்சபெருமாள்பட்டி(வடக்கு, தெற்கு), தங்கநகர், நெட்டவேலம்பட்டி, ருத்ராட்சை உள்ளிட்ட பகுதிகளில் உயர் மின்கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன என தெரிகிறது.
கரூர் பவர்கிரிட் கார்ப்பரேசன் ஆப் இந்தியா மூலம் செயல்படுத்தப்படும் மின்பாதை அமைக்கும் திட்டம் 29.97 கிலோ மீட்டர் தூரமாகும். 440கே.வி. திறன்கொண்ட மின்பாதை அமைக்க நேற்று நாகநல்லூர் கிராமத்திற்கு நிலஅளவையர் சித்ரா மற்றும் பணியாளர்கள், வருவாய் ஆய்வாளர் ராதா, கிராம நிர்வாக அலுவலர் தீபா, உயர்அழுத்த மின்கோபுர அதிகாரிகள் துரைமுருகன், ஜம்புலிங்கம் உள்ளிட்ட பலர் வந்தனர்.
அவர்களை விவசாயிகள் சங்கத் தலைவர் நாமக்கல் பெருமாள் தலைமையில் விவசாயிகள் முற்றுகையிட்டு, விவசாய நிலங்களில் உயர்அழுத்த மின்கோபுரங்கள் அமைக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் எந்த பணியும் மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்றனர்.