வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள், பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு வலைவீச்சு
வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி,
திருச்சி உறையூர் வடக்கு சீனிவாசநகர் கனரா வங்கி காலனியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 66). இவர் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருடைய மனைவி நாகம்மாள். இவர் நேற்று முன்தினம் மாலை கோவிலுக்கு சென்று விட்டார். சிதம்பரம் மருந்து வாங்க வீட்டை பூட்டி விட்டு, மருந்துக்கடைக்குசென்றார்.
ஒரு மணி நேரத்துக்கு பிறகு இருவரும் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பின்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் ஆகியவை திருட்டு போய் இருந்தன.
இதுகுறித்து சிதம்பரம் உறையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விரல்ரேகை நிபுணர்களும் வந்து சோதனை நடத்தினார்கள். இதையடுத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.